இந்தியா

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 01.30 மணி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வு தேதிகள், தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை என்ற cbse.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வு குறித்த தேதிகள் வெளியான நிலையில் சிபிஎஸ்சி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version