இந்தியா

சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பிராக்டிக்கல் தேர்வு எப்போது? முழு விபரங்கள்

Published

on

சிபிஎஸ்இ பிராக்டிக்கல் தேர்வுகள் 2023 முழு அட்டவணை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வுகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 2 மற்றும் ஜனவரி 14 க்கு இடையில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து மாணவர்களின் பிராக்டிக்கல் தேர்வுகளையும் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யுமாறு பள்ளிகளை சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது. பிராக்டிக்கல் தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பாடங்களில் பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தயாரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சரியான நேரத்தில் தெரிவிக்க வேண்டும். இதனால் அனைத்து மாணவர்களும் பிராக்டிக்கல் தேர்வுகளில் பங்கேற்க முடியும்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான பிராக்டிக்கல் தாளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

2022-23 அமர்வுக்கான பிராக்டிக்கல் தேர்வில் ஒரு மாணவர் வரவில்லை என்றால், அந்த மாணவருக்கு பிராக்டிக்கல் தேர்வு வேறு தேதியில் நடத்தப்பட வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பிராக்டிக்கல் தேர்வின் அட்டவணை இதோ:

Trending

Exit mobile version