தமிழ்நாடு

10,12ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு தேதி அறிவிப்பா? சி.பி.எஸ்.இ விளக்கம்!

Published

on

10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் பள்ளிகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசை பொறுத்தவரை இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம்வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு கிடையாது என்றும் நேரடியாக முழு ஆண்டு தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவல் காரணமாக சிபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு தேதி வெளியாவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவலுக்கு சிபிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. முதல் பருவத்தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பையும் சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடவில்லை என்றும், அந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version