தமிழ்நாடு

ரத்து செய்யப்படுகிறதா சி.பி.எஸ்.இ தேர்வுகள்: தமிழக பள்ளிகள் மீது குற்றச்சாட்டு!

Published

on

தமிழகத்தின் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் மற்றும் மார்ச் மாதம் என இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் கட்ட தேர்வில் நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும் என்ற அமைப்பில் தேர்வு நடந்தது. இதில் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே சிபிஎஸ்இ பள்ளிகளின் ஆசிரியர்கள் கேள்வி தாளில் விடைகளை மாணவர்களுக்கு அளித்துள்ளனர் என்றும் விடை தெரியாத கேள்விகளுக்கு சி என்று குறிப்பிட வேண்டும் என்றும் அதன்பிறகு ஆசிரியர்கள் அதனை சரியான விடையாக திருத்தி எழுதுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

முதல் கட்ட தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இரண்டாம் கட்ட தேர்வில் கணக்கிடப்படும் என்பதாலும், தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் ஆசிரியர்களே இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக சிபிஎஸ்இ மேலான கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ அமைப்புக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதம் காரணமாக விசாரணை நடத்தப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

Trending

Exit mobile version