தமிழ்நாடு

சிபிஎஸ்சி 10, 12 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது?

Published

on

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியான நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்த தேதி நாளை வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஜூலை 20-ஆம் தேதி அதாவது இன்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

முதலில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அதன்பின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version