இந்தியா

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வுத்தேதி அறிவிப்பு!

Published

on

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதி குறித்த அட்டவணை வெளியானது. இந்த அட்டவணை போலியானது என்றும் சிபிஎஸ்சி அதிகாரபூர்வமாக இன்னும் சில மணி நேரங்களில் முதல் பருவத்தேர்வு காண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பதும் இந்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள இந்த தேர்வு தேதி தான் அதிகாரபூர்வமான தேர்வு தேதி என்றும் மேலும் தேர்வு குறித்த விவரங்களை சிபிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

seithichurul

Trending

Exit mobile version