இந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்!

Published

on

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்வி நீக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது என்றும் அந்த கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் கொண்ட கேள்வி இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த கேள்வி குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை அடுத்து அந்த கேள்வியை சிபிஎஸ்சி நிர்வாகம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சர்ச்சைக்குரிய கேள்வி 10ஆம் வகுப்பு தேர்வுத்தாளில் இடம்பெற்றது குறித்து உரிய விசாரணை செய்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை அடுத்து மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் இது குறித்து அவர் பேசியபோது மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது.

Trending

Exit mobile version