இந்தியா

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் சென்னை மாணவர்கள் சாதனை!

Published

on

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம் இதில் சென்னை மண்டலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவதற்காக குழு அமைக்கப்பட்டது என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த குழுவின் பரிந்துரைப்படி சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது என்பதும் இந்த மதிப்பெண் பட்டியலில் பெரும்பாலான மாணவர்களுக்கு திருப்தி அடைந்தனர் என்பதும் ஒரு சிலர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானதை அடுத்து தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது. இந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 99.94 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

99.99 தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், பெங்களூர் மண்டலம் 99.96% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே மூன்றாவதாக சென்னை மண்டலம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version