இந்தியா

மமதா சிபிஐ சண்டை.. மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் முறையிட முடிவு!

Published

on

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.

தற்போது சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிய பூதகரமாகி உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கிறது

இதையடுத்து தற்போது பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு போன் செய்து பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் மமதாவிற்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்கள். நேற்றே இரவே இவர்கள் எல்லோரும் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. அதாவது மத்திய பாஜக அரசு தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை கைக்குள் கொண்டு வரும் வகையில் சிபிஐயை வைத்து எல்லோரையும் பயமுறுத்துகிறது. சிபிஐ அமைப்பை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று புகார் அளிக்க இருக்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version