இந்தியா

மமதா vs சிபிஐ.. எதிர்க்கட்சிகள் இன்று அவசர ஆலோசனை.. பலே திட்டம்!

Published

on

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

நேற்று சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய வந்தனர். ஆனால் மமதாவின் உத்தரவின் பேரில் கடைசியில் கொல்கத்தா போலீஸ், சிபிஐ அதிகாரிகளை கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக அவர் தர்ணா செய்து வருகிறார்.

மமதா பானர்ஜிக்கு ஒன்று என்றவுடன் தற்போது எதிர்க்கட்சிகள் பல அவருக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறது. ஏற்கனவே மெகா லோக்சபா தேர்தல் கூட்டணி காரணமாக, எதிர்க்கட்சிகள் பல நண்பர்களாகி உள்ளனர். தற்போது இந்த மமதாவின் போராட்டம் எதிர்கட்சியினரை மேலும் இணைந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Trending

Exit mobile version