தமிழ்நாடு

எதுக்கு.. இது தேவையா.. சிபிஐக்குள் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கொண்ட மோடி!

Published

on

சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார்.

கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

மத்திய அரசு இந்த வழக்கு மூலம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மத்திய அரசு அவர்களுடன் கலந்தாலோசித்து இருக்கு வேண்டும் என்று கூறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version