தமிழ்நாடு

குட்கா ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணை வளையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published

on

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா ஊழல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ இயக்குநர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு மனு அளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கை தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏறகனவே இரண்டு முறை விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாததால் இறுதியாக மூன்றாவது முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version