இந்தியா

சிபிஐ கைது செய்த பின்னர் இரவில் நடந்த சிதம்பர(ம்) ரகசியம்!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து விதம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இரவு 10 மணியளவில் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு மருத்துவர்கள் குழு ஒன்று சோதனை செய்தது. அதில் ரத்த அழுத்த சோதனை முதலில் செய்தனர். பின்னர் சுகர் இருக்கிறதா என கேட்டனர். அதற்கு சிதம்பரம் இல்லை என பதிலளித்தார்.

இரவு உணவு என்ன வேண்டும் என அதிகாரிகள் சிதம்பரத்திடம் கேட்டனர். அதற்கு அவர் ஒரு டீ போதும் என்றார். இதனையடுத்து அவருக்கு டீ வழங்கப்பட்டது. அப்போது அங்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்க்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளும், சிபிஐ உயர் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்களிடம், நான் சட்டத்தை மதிக்கிறேன், நீங்களும் சட்டத்தை மதிப்பீங்கனு நம்பினேன் என கூறி சிரித்தார் ப.சிதம்பரம். அதற்கு அவர்கள் பல் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அவர்களிடம், என்னை எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போகிறீர்கள்? என கேட்டார் சிதம்பரம். சார் நாளைக்குதான் உங்களை ஆஜர்படுத்த சொல்லியிருக்கிறார்கள் என கூறி சிதம்பரத்திடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள் ஐஎன்எக்ஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள். அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிபிஐ வட்டாரத்தில்.

seithichurul

Trending

Exit mobile version