தமிழ்நாடு

கலப்பு திருமணம் செய்த குழந்தையின் சாதி: தமிழக அரசின் புதிய அரசாணை!

Published

on

கலப்பு திருமணம் செய்த குழந்தையின் சாதி குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதுவரை கலப்பு திருமணம் செய்த குழந்தைக்கு தந்தையின் சாதியை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதனடிப்படையில் குழந்தைக்கு ஒரு ஜாதியை குறிப்பிட்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு அரசாணை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவின்படி இனிமேல் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்த குழந்தையின் ஜாதி என்ன என்பதை அந்த குழந்தையின் பெற்றோரே முடிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு பெரும் வரவே கிடைத்து உள்ளது என்றாலும், இட ஒதுக்கீடு பெறும் குழந்தைகளுக்கு இந்த உத்தரவால் பிரச்சனைகள் ஏதும் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version