சினிமா செய்திகள்

நான்கு கிராமி விருதுகளை வென்ற கேஸி முஸ்கிரேவ்ஸ்!

Published

on

61வது கிராமி விருது விழா கோலாகலமாக நிறைவுற்றது. 3 விருதுகளை அள்ளி லேடி காகா ஒருபுறம் அசத்த மற்றொரு புறம் லேடிகாகாவை பின்னுக்குத் தள்ளி 4 கிராமி விருதுகளை கேஸி முஸ்கிரேவ்ஸ் வென்று இன்றைய கிராமி நிகழ்ச்சியை தனக்கான நிகழ்ச்சியாக மாற்றி அசத்தினார்.

கேஸி முஸ்கிரேவ்ஸின் கோல்டன் ஹவர் ஆல்பத்திற்கு 2018ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருதும் சிறந்த தேசிய ஆல்பம் விருது என 2 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், தேசிய பாடலான ஸ்பேஸ் கவ் பாய் மற்றும் பட்டர்பிளைஸ் என்ற பாடல்களை பாடியதற்காகவும் அடுத்த இரு கிராமி விருதுகளையும் கேஸி முஸ்கிரேவ் தட்டி சென்றார்.

சிறந்த பாடலுக்கான விருதினை திஸ் இஸ் அமெரிக்கா வென்றது. சிறந்த அறிமுக பாடகர் விருதினை டுவா லிபா வென்றார். சிறந்த ராப் பாடகர் விருதினை கிகி சேலஞ்ச் என்ற பாடலை பாடிய உலக மக்களை காரில் இருந்து கீழே குதித்து ஆடச் செய்த டிரேக் பெற்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version