தமிழ்நாடு

பொங்கல் பரிசுப்பொருட்களுடன் ரொக்கமும் உறுதி: எவ்வளவு கிடைக்கும்?

Published

on

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம் வழங்க வாய்ப்பு இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டும் அரிசி அட்டைதாரர்களுக்கு 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.

அரிசி அட்டைதாரர்கள் மட்டுமன்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார், இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருள்கள் இருக்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கமும் வழங்க வேண்டும் என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன என்பதும் பொதுமக்களும் ரொக்கம் வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் அதிருப்தியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கமும் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். எனவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசுடன் ரொக்கமும் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயிரம் ரூபாய் அல்லது இரண்டாயிரம் ரூபாய் ரேஷன் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கிடைக்கும் என்றும் இதுகுறித்த முறையான அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version