தமிழ்நாடு

வழக்குகள் வாபஸ்: சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மத்திய கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய வேளாண்மை சட்டத்தை இயற்றியது என்பதும் இந்த வேளாண்மை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்பட ஒரு சில மாநிலங்களில் விவசாயிகள் டெல்லியில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் பல மாதங்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறப்படுவதாக சட்டமன்ற சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர் வேல்முருகன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 385 நாட்களாக உழவர்கள் டெல்லியில் போராடி வருகின்றனர் என்றும் விவசாயிகள் வாழ்வு செழிக்க திமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அதனை அடுத்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கூறினார். இந்த தீர்மானத்தின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மூன்று வேளாண்மை சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை என்றும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லாத மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version