தமிழ்நாடு

சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு!

Published

on

தீபாவளியின் போது, சென்னையில் தமிழக அரசு விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 348 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாக 2019-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது நேரக்கட்டுப்பாட்டை அறிவித்து வருகிறது தமிழக அரசு.

எனவே இந்தாண்டு தீபாவளியின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். இல்லை என்றால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் இந்த நேரக்கட்டுப் பாடு மற்றும் காவல் துறையின் எச்சரிக்கையை மீறி, தீபாவளியின் போது 348 நபர்கள் பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட சென்னை மண்டலத்திலிருந்து மட்டும் 82 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே பொன்று சென்னையின் கிழக்கு, மேற்கு, தெற்கு பதிகளிலும் 80 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவை மீறுதல், அஜாக்கரதியாக பட்டாசு வெடித்தது போன்ற வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version