தமிழ்நாடு

எஸ்.பி வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோவை வீட்டில் இன்று காலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வந்த நிலையில் தற்போது எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான வீட்டிலும் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை உள்பட பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை உள்ளிட்ட பல இடங்களில் 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு திட்ட பணிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முறைகேடு செய்ததாக புகார் வந்துள்ளதை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வேலுமணி வீட்டு முன் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை சென்னை உள்பட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருவதாகவும் சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலுமே பதட்ட நிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மக்கள் நலத்திட்டங்களில் 12 சதவீதம் கமிஷன் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடுகளில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் சகோதரர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version