தமிழ்நாடு

தியேட்டரில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து? இன்று நீதிமன்ற விசாரணை

Published

on

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு, மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார், ராம்சுந்தர் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது நீதியரசர்களிடம் பேசிய அவர்கள், ‘திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இது மத்திய அரசின் கொரோனா பேரிடர் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றனர். மேலும், கொரோனா பரவல் இருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறு திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் திறப்பது என்பது பேராபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதாகவும் கூறினர்.

இதனையடுத்த வழக்கறிஞர்களின் இந்த கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க  வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள், இன்று அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கின்றனர்.

இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ன வாதாடப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்த பிறகே, மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் செய்வது உறுதியாகினது. தற்போது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து  பட ரிலீஸ் தேதியும் தள்ளி போக வாய்ப்புகள் உள்ளன.

Trending

Exit mobile version