செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு… அதிமுகவில் பரபரப்பு..

Published

on

தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது.

இந்நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கிருந்தார். அவரும், அதிமுகவினரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரின் சட்டையை கழட்டி கையை பின்புறம் கட்டி அவரை அழைத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதைப்பார்த்த பலரும் அந்த நபர் தவறே செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஜெயக்குமார் எப்படி சட்டத்தை கையில் எடுக்க முடியும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறையினருக்கும் பலரும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார் உள்ளிட்ட 40 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், தன்னை திமுகவினர் தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுனர் கொடுத்த புகாரில் சில திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version