தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Published

on

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

எம்ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016, 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோது பதிவு செய்த சொத்து மதிப்புக்கும் இன்றைய சொத்து மதிப்பிற்கும் இடையே 55 சதவீதம் அதிகமாக இருப்பதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் எம்ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2016 இல் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த பின் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் மதிப்பிடப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து வங்கி கணக்குகளை முடக்க திட்டமிட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version