தமிழ்நாடு

கே.என்.நேருவை அடுத்து துரைமுருகன் மீதும் வழக்குப்பதிவு: அடுத்தது ஸ்டாலினா? உதயநிதியா?

Published

on

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் நேற்றிரவு திமுக பிரமுகர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது. இதனை அடுத்து பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்த போது கோபி என்பவர் பிடிபட்டார். அவரிடம் 50 ஆயிரம் பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து கோபியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சித்தல், அவதூறாக பேசுதல் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கே.என்.நேரு, துரைமுருகனை அடுத்து ஸ்டாலின், உதயநிதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version