தமிழ்நாடு

ரூ.500 கோடி ஊழல் புகார்: ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவா?

Published

on

முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகார் கூறி இது குறித்து வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மீது ரூபாய் 500 கோடிக்கு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூபாய் 500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் இந்த மனு குறித்து விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் மீது இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version