தமிழ்நாடு

எஸ்பி வேலுமணி விவகாரம்: 10 நிறுவனங்கள் மற்றும் 7 பேர்கள் மீது வழக்குப்பதிவு!

Published

on

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கோவை வீடு உள்பட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் வெற்றி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூபாய் 464 கோடியும் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் ரூபாய் 346 கோடி ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் தான் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள எஸ் பி வேலுமணி அறையிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எஸ்பி வேலுமணி விவகாரத்தில் 10 நிறுவனங்கள் மற்றும் ஏழு நபர்கள் என 17 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது/ வேலுமணியின் சகோதரர் ஆர். சந்திரசேகர், கே. சந்திரசேகர், முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் ஜேசுராஜன் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

எஸ் பி வேலுமணி மீதான புகாரில் 10 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலின்படி என்னென்ன நிறுவனங்கள் என்பதை தற்போது பார்ப்போம். கேசிபி இன்ஜினியர்ஸ், ஏஸ் டெக் மெஷினரி, காஸ்ட்ரானிக்ஸ் இன்ஃப்ரா, ஸ்ரீ மஹா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் ஃபவுண்டேசன், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்ன லட்சுமி ஹோட்டல்ஸ், AR ES PE இன்ஃப்ரா, ஆலம் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version