தமிழ்நாடு

முதல்வர் காருக்குப் பின்னால் வந்த வாகனங்கள் விபத்து; பதறவைக்கும் வீடியோ!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேரன்மாதேவி சென்று கொண்டிருந்தார். கார் மூலம் முதல்வரின் வாகனம் முன்னே செல்ல, அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் கான்வாய் வாகனங்கள் பின்னே வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அதிமுகவினர் பலர் வாகனங்கள் மூலம் முதல்வரைப் பின் தொடர்ந்து சென்றனர். இப்படி சென்று கொண்டிருந்த போது, ஒரு வாகனம் திடீரென்று இன்னொரு வாகனத்தின் மீது மோதியது. இதனால் ஒரு வாகனத்தின் முன் பக்கம் முழுவதும் சேதமானது.

தொடர்ந்து விபத்துக்கு உள்ளான இரண்டு வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர் காவல் துறையினர். பின்னால் வந்த வாகனங்கள் மீண்டும் முதல்வர் காரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த விபத்து சம்பவத்தால் சேரன்மாதேவிக்கு அருகில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பதறவைத்துள்ளது.

இந்த சம்பவத்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கோ எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை.

வீடியோ இதோ:

seithichurul

Trending

Exit mobile version