உலகம்

சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல் திரும்பும் வைரல் வீடியோ!

Published

on

உலகின் முக்கிய கடல் வழித் தடமான சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஒன்று சிக்கி, மொத்த வழிப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக எகிப்து நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீட்புப் படையினரின் கடும் முயற்சிகளுக்குப் பின்னர் சிக்கிய கப்பல், மீட்கப்பட்டுள்ளது. இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையை ஒரு வார காலத்துக்கும் மேலாக முடக்கி வைத்திருந்த ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, இந்த ‘எவா் கிவன்’ என்ற கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது திடீரென அந்தக் கப்பல் குறுக்கே திரும்பி சிக்கிக் கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது. எவா் கிவன் கப்பலை நேராகத் திருப்பி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சி ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேற்று கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version