கிரிக்கெட்

சென்னைப் போட்டியின் ‘மாஸ்டர்’ அஷ்வினை ஜாலி இன்டர்வியூ செய்த கேப்டன் கோலி!

Published

on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும் ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அஷ்வினை நேர்காணல் செய்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 – 1 என சமன் செய்துள்ளது.

இந்நிலையில் அஷ்வினை இன்டர்வியூ செய்த கேப்டன் கோலி, ‘இந்த வெற்றியையும் உங்களின் ஆட்டத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அஷ்வின், ‘என் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக எப்படி உணர்கிறேன் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியற்கு மிக்க மகிழ்ச்சி’ என்றார்.

தொடர்ந்து கோலி, ‘உங்கள் ஆட்டத்தில் ஒரு மாற்றம் இருப்பதாக நான் உணருகிறேன். முன்பிருந்த அஷ்வினுக்கும் இப்போதைய அஷ்வினுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆஸ்திரேலியாவிலும் நான் அதைப் பார்த்தேன்’ என்று கேட்டார்.

‘கொரோனா லாக்டவுன் காலக்கத்தில் கிரிக்கெட் இல்லாமல் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் எப்படி விளையாடுகிறேன், அதை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை கவனித்தேன். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கு நான் யார் என்பதை நிரூபிப்பதை விட, எனக்குள் நான் சில விஷயங்களை உறுதிப்படுத்த விரும்பினேன்.

அந்த உறுதித் தன்மை ஒரு சாந்தமான மனநிலையைக் கொடுத்துள்ளது. அது தான் தற்போது மைதானத்திலும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

எனக்கு ஒரு விஷயம் திட்ட வட்டமாக புரிந்தது என்னவென்றால், நமக்குள் சரியென ஒரு விஷயம் தோன்றினால் அதன் படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் சமீப காலமாக எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது’ என முடித்தார்.

 

Trending

Exit mobile version