தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்: பிரமுகர்கள் வாழ்த்து!

Published

on

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனது தொண்டர்களை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் தனது பிறந்தநாளை எளிய முறையில் கொண்டாட இருப்பதாகவும் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரண்டு ஆளுமையான தலைவர்கள் தமிழக அரசியலில் இருந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்து அந்த கட்சியை மூன்றாவது பெரிய கட்சியாக கொண்டுவந்தது கேப்டன் விஜயகாந்தின் சாதனை ஆகும். ஆனால் அதன் பின்னர் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின்னர் தனித்தன்மையை இழந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் கேப்டன் விஜயகாந்த் கட்சிக்கு என ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு வங்கி தமிழகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபட முடியவில்லை. இதனால் அவருடைய கட்சியின் வாக்கு வங்கி பின்னடைவு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி தனது தனது கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version