விமர்சனம்

சூப்பர் ஹீரோ ஆகுறது சுலபமான விஷயமல்ல – கேப்டன் மார்வெல் விமர்சனம்!

Published

on

சும்மா சூப்பர் ஹீரோ படம் என்றால், என்ன வேண்டுமானாலும் கம்பு சுத்தலாம்.. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு மாயாஜால வித்தையை காட்டி ஆடியன்ஸ் வாயை பிளக்க வைத்து விடலாம் என நினைக்காமல், ஒருத்தர் சூப்பர் ஹீரோவாக ஏன் மாற வேண்டும். அதற்கான தேவை, அதற்கான உழைப்பு, போராட்டம் மற்றும் மார்வெல் சினிமா உலகம் தோன்ற முன்னோடியாக விளங்கப் போகும், ஒரு சூப்பர் ஹீரோவை பற்றிய கதை எத்தனை நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணி, பிளான் பண்ணி, இந்த கேப்டன் மார்வெலின் திரைக்கதை பக்காவாக ஸ்கெட்ச் செய்யப்பட்டு, எக்ஸிகியூஷனும் அற்புதமாக அசத்தலாக செய்யப்பட்டுள்ளது.

பிரை லார்சன், வேற்று கிரகத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் ஒரு பெண், அவரது ஸ்பேஸ் ஷிப்பில் ஏற்படும் விபத்தால், பூமிக்கு வந்து இறங்குகிறார். அவருக்குள் இருக்கும் சக்திகள் ஒவ்வொன்றாக வெளியாகின்றன. அயன்மேன், ஸ்பைடர்மேன், தோர், ஹல்க் ஆகிய எல்லா சூப்பர் ஹீரோக்களையும் விட, கேப்டன் மார்வெலுக்கு அதீத சக்திகள் எதனால், வருகின்றன. அவர் யார் என தெளிவாகவும், ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களின் முதல் பாகத்தை நினைவூட்டும் அளவுக்கு வலிமையோடவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நிக் ஃப்யூரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் எல். ஜாக்சன், மற்ற அவெஞ்சர்ஸ் படங்களில் வருவது போல, கடுமையான முகத்துடன் வராமல், தனக்கே உரிய ஜாலியான நக்கலான அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கப்போகும் தலைவனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவர்களை தவிர வேறு எந்த சூப்பர் ஹீரோவும் நடிக்க வில்லை. ஆனாலும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில், அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் காப்பாற்றப் போகும், தானோஸை அழிக்கப்போகும் காளியாத்தா கேப்டன் மார்வெல் தான் என்பதை சில காட்சிகள் மூலம் லீடு கொடுக்கவும் இயக்குநர் தவறவில்லை.

இத்தனை சூப்பர் சக்திகள் இருந்தாலும், பிரை லார்சன் அதனை குறைவாக பயன்படுத்துகிறாரா.. இல்லை தேவைக்கேற்ப இது போதும் என பயன்படுத்துகிறாரா? என்ற குழப்பம் அடியன்ஸ் மனதில் அவ்வப்போது எழத்தான் செய்கிறது.

அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து போன பிரம்மாண்ட சண்டை காட்சிகள், அற்புத சக்திகளின் விளையாட்டுகள் இந்த படத்தில் சற்று குறைவாகவே காணப்படும். அதற்கு திரைக்கதையில் சமாளிபிகேஷன் காரணங்களையும் இயக்குநர் அடுக்கியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதால், அதற்கு முன்னதாக, கேப்டன் மார்வெலை மார்வெல் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த படம் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் தினமான நேற்று பெண்களின் சக்தியை போற்றும் கேப்டன் மார்வெல் படம் உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வசூல் சாதனையையும் குவித்துள்ளது.

தமிழ்நாட்டில், அதர்வாவின் பூமராங், கதிரின் சத்ரு, பரத்தின் பொட்டு மேலும், கபிலவஸ்து போன்ற படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படாமல், 3டி படமான கேப்டன் மார்வெலுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினி ரேட்டிங்: 3.5/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version