இந்தியா

கிரிமினல் வழக்கு இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

தற்போது அரசியலில் பலர் கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள். ஒவ்வொருமுறை தேர்தல் வரும் போதும் கட்சி வாரியாக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி அதிர்ச்சியளிக்கும்.

அதிகமான எண்ணிக்கையில் கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக தற்போது உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்து, தேர்தலில் போட்டியிட கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பல தனி நபர்கள், அமைப்புகள் வழக்கு ஒன்றை தொடுத்தனர்.

இந்த வழக்கு 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று காலை வழங்கியுள்ளது. அதில் எம்பி, எம் எல் ஏக்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version