இந்தியா

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத்தொகை அதிகரிப்பு: எத்தனை லட்சம் தெரியுமா?

Published

on

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகை அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக செலவுத்தொகை வரம்பு பின்வருமாறு:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை செலவுத்தொகை ரூ.95 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகை ரூபாய் 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் செலவு உச்சவரம்பை மாற்றி அமைத்து சட்ட அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version