இந்தியா

இந்திய கொரோனா பரிசோதனை சான்றிதழை ஏற்க முடியாது- கனடா திட்டவட்டம்

Published

on

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் சான்றிதழ் உடன் கனடா நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என கனடா தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடி விமானங்கள் வருவதற்கு கனடா அனுமதி அளிக்கவில்லை. இந்தத் தடை வருகிற ஜூலை 27-ம் தேதி வரை தொடர்கிறது. நேரடி விமானங்கள் இல்லையென்றாலும் இந்தியாவிலிருந்து கனடா வரும் பயணிகள் இந்திய கொரோனா சான்றிதழ் மட்டும் வைத்திருந்தால் அனுமதி கிடையாது என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மூன்றாவதாக நடுவில் ஒரு நாட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் அளித்தால் மட்டுமே கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்று அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் உடன் கனடாவுக்குள் நுழைய வேண்டும்.

இதனால், இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மாணவர்கள், ஐடி பணியாளர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

Trending

Exit mobile version