உலகம்

கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய கனடா!

Published

on

ஒரு வருடத்திற்கு முன்பு கனாட பிரதமர் ஜஸ்டின் ட்யூடியே 2018 அக்டோபர் முதல் கஜ்சா விற்பனை சட்டப்பூர்வமானதாக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அது அக்டோபர் 17 முதல் அமலுக்கு வந்தது.

உலகளவில் சட்ட ரீதியாகக் கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளித்த நாடு கனடா என்ற பெருமையும் பெற்றுள்ளது.

கஞ்சாவிற்கு ஏன் அனுமதி அளிக்கிறீர்கள் என்று ஜஸ்டின் ட்யூடியேவிடம் கேட்ட போது “இதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு அதில் புழங்கிக்கொண்டு இருக்கும் பணம் கணக்கில் வருவது உதவி அளிக்கும்” என்றார்.

ஆனால் பார், ரெஸ்டாரண்ட்களில் எல்லாம் கஞ்சா விற்கப்படாது என்றும் குறிப்பிட்ட சில அரசு கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்று அவற்றின் போதை தன்மை குறைவாகவும் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version