உலகம்

வெளிநாட்டவர்கள் சொந்த வீடு வாங்கக்கூடாது.. எந்த நாட்டில் இந்த உத்தரவு?

Published

on

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் நாடுகளில் ஒன்று கனடா என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென கனடா அரசு வெளிநாட்டவர்கள் கனடாவில் சொந்த வீடு வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும்பாலான மக்கள் கனடாவில் வாழ விரும்புவார்கள் என்றும் அதனால் ஒவ்வொரு ஆண்டும் கனடாவில் குடியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் கனடாவில் சொந்த வீடு வாங்க முயற்சித்ததாஅகவும், அதனால் உள்ளூர் மக்களுக்கு வீடு கிடைக்காத நிலை ஏற்பட்டது என்றும் வீடுகளின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணை தொடும் அளவுக்கு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கனடா அரசு இது குறித்து ஆய்வு செய்து வீடுகள் என்பது மக்கள் வாழ்வதற்காக தான் என்றும், முதலீட்டிற்கு அல்ல என்றும் கூறி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி கனடாவில் குடியிருப்பு சொத்துக்களை முதலீடுகளாக மாற்றும் வெளியிட்டவருக்கு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், வீடுகள், மனைகள் விலை உயர்வை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதிலிருந்தே கனடாவின் வீட்டின் விலை உயர்ந்து வருவதாகவும் அதற்கு சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கனடாவில் அதிகமான அளவில் வீடுகளை வாங்கி போட்டு முதலீடுகளாக மாற்றியதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் புலம்பெயர்ந்தோர் மற்றும் கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருப்பவர்கள் வீடுகளை வாங்கலாம் என்றும் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் தொழில் அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் முதலீடுகள் தாராளமாக வரவேற்கப்படுகிறது என்று கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆனால் அதே நேரத்தில் கனடாவில் வீடுகளாகவும் நிலங்களாகும் முதலீடு செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்கள் அதிகமாக கனடாவில் வீடு நிலம் வாங்கியதன் காரணமாக கனடாவில் உள்ள வீடுகள், மனைகளின் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு விலை ஏறிவிட்டது என்றும் வீடுகள் மக்களுக்காக தான் தவிர முதலீட்டாளர்களுக்கு அல்ல என்றும் அவர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் வீட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், வீட்டின் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை என்றும் ,ஆனால் அதே நேரத்தில் இனி வீடுகளின் விலை அதிகமாக ஏறுவதற்கும் வாய்ப்பு குறைவு என்றும் கனடாவின் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version