சினிமா செய்திகள்
ஹாஃப் சாரியை இப்படியும் போடலாமா?
இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என்ற ஒரே பாடலில் ஆந்திரா மட்டுமில்லாமல் அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மீதுதான் தற்போது, தென்னிந்திய ரசிகர்களின் கண்கள் முழுவதும் பதிந்துள்ளன.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வரும் ராஷ்மிகா, தற்போது, ஹாஃப் சாரி ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும், ஒரு புகைப்படத்தில் ஹாஃப் சாரியின் முந்தானையை ஸ்டைலாக முன்னாடி கழட்டி விட்டு, காக்ரா சோலி அணிந்தது போல் போஸ் கொடுத்துள்ளார்.
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு பலரது மொபைல் டிபிக்களாகவும் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாகவும் மாறியுள்ளன.