தமிழ்நாடு

தூத்துக்குடியில் போய் பேச முடியுமா? ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Published

on

ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் தூத்துக்குடி சென்று இவ்வாறு பேச முடியுமா என சவால் விடுத்துள்ளார்.

Udhaya 2

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது வருந்தத்தக்கது. ஆனால் நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் கூறிய கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் காட்டமான பதிலடி கொடுத்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இது தொடர்பாக பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெளிநாட்டில் இருந்து நிதிகளைப் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டுள்ளதாக ஆளுநர் பேசியுள்ளார். தூத்துக்குடி போய் அவர் இதுபோல் பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்.

பொதுக்கூட்டத்திலோ, மாநாட்டிலோ, தூத்துக்குடியிலோ போய் பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். நூறு நாட்கள் நடந்த மிகப்பெரிய போராட்டம். 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல் தான். இதை அவர் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகச் சொன்னார். இதற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதை கண்டிக்கிறோம் என்றார் காட்டமாக.

seithichurul

Trending

Exit mobile version