ஆரோக்கியம்

காலையில் விழித்தப்பின் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

Published

on

மனிதர்களுக்குக் காலை உணவு என்பது மிகவும் அவசியமும் அத்தியாவசியமும் நிரம்பியது ஆகும். காலையில் சாப்பிடாமல் தவிர்ப்பதால் அல்சர் நோய் முதல் வாயுப் பிரச்சனை வரை பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம் நாள் முழுவதும் சோர்வாகவே உடல் இருக்கும். இதைத் தவிர்ப்பதற்கு காலையில் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

காலை எழுந்தவுடன் சமைத்துச் சாப்பிடுவதற்குப் பலருக்கு நேரம் இருக்காது. சிலருக்கு காலையில் சமைப்பது பிடிக்காது. அப்படியானவர்கள் மிகவும் சுலபமான வாழைப் பழத்தைச் சாப்பிடக்கூடும். இது நல்லதா? கெட்டதா?

 

காலையில் வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது தான். ஆனால், வெறும் வயிற்றில் முதல் உணவாக அதை எடுத்துக் கொள்வது சரியானது கிடையாது என்று உணவுத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். காரணம் வாழையில், அமிலத் தன்மை நிரைந்திருக்கும். இந்த அமிலத் தன்மை வெறும் வயிற்றில் உடலுக்குள் சென்றால் அது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

எனவே வாழைப் பழத்தை ஓட் மீல் அல்லது பிற பழங்களுடன் காலையில் எடுத்துக் கொள்வது உவந்ததாக இருக்கும்.

 

 

seithichurul

Trending

Exit mobile version