ஆரோக்கியம்

தினமும் இதனைச் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படாது.. தெரியுமா?

Published

on

முட்டையின் வெள்ளைக் கருவில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. ஆனால் ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், பி, பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

வளரும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டையை அவித்துக் கொடுக்கலாம். உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதிலுள்ள கொழுப்புகளும் ஆபத்தானது அல்ல.

நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து இதில் இருக்கிறது.

இதன் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

இதிலிருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டையுடன் காய்கறி மட்டும் சேர்த்தால் உடல் எடை குறையும்.

முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதிகம் முட்டைகளைச் சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கத்தார் பல்கலை.

மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக அளவில் முட்டை சாப்பிட்டு வந்தால் 60% நீரிழிவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version