சினிமா

மறுதணிக்கை செய்யப்படுமா 2.0? இது சிக்கலா படத்திற்கான புது விளம்பரமா?

Published

on

ரஜினியின் 2.0 படத்தில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி செல்போன்கள் பயன்பாடு குறித்து அபாண்டமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் மீது புகார் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்கார் படத்தை மறு தணிக்கை செய்தது போல 2.0 படத்தையும் மறு தணிக்கை செய்யவேண்டும் எனவும் மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

வரும் நவம்பர் 29ம் தேதி 2.0 ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது படத்தின் வசூலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்கார் படத்திற்கு எழுந்த இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் நெகட்டிவ் விளம்பரங்களாகவே மாறின. இந்நிலையில், இது 2.0 படத்திற்கு விளம்பரமாக மாறும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version