ஆரோக்கியம்

அமிலத்தன்மையை குறைக்கவும், உடலில் ஏற்படும் எரிச்சல் நீக்கும் உதவும் சுரைக்காய்!

Published

on

சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளன. காமாலை நோய்க்கு நல்ல மருந்து நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். கை, கால் எரிச்சல் நீங்கச் சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குறையும்.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயைச் சாப்பிடலாம். வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போடத் தலைவலி நீங்கும். சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடுதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாகக் குறைவும். உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. முடி நரைக்காமல் அடர்த்தியாக வளர உதவுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் அண்டாது. மதிய உணவுடன் சுரைக்காய் ஜுஸ் அருந்தி வந்தால் பித்தம் சமநிலை அடையும். கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் இயற்கையாகவே கிடைக்கின்றன. எனவே இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் சாறு குடிப்பதால், முடி நரைக்காமல் இருப்பதோடு, முடியும் அடர்த்தியாக வளரும். இளம் வயதிலேயே முடி நரைப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

சுரைக்காயின் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. சிறுநீர் நோய்களைக் குணப்படுத்தும். சுரைக்காய் உடலுக்குக் குளிர்ச்சியை வழங்குவதில் சுரைக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.

சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர்க் கட்டு ஆகியவற்றிற்குச் சிறந்த நிவாரணியாக உள்ளது. வெப்ப நோய்கள் வராமல் பாதிக்கிறது. நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்துகிறது.

Trending

Exit mobile version