இந்தியா

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அரசு முடிவு

Published

on

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக திருநங்கைகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகளையும் ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் திருநங்கைகளை ஓபிசி பிரிவினருக்கான பட்டியலில் சேர்க்கும் வரைவு அறிக்கையை, சமூக நீதித் துறை, மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன்பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்ற பின்னர் திருநங்கைகளின் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் திருநங்கைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயன் பெறுவார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தி ஆகும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவில் காண பிரிவில் திருநங்கைகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் வழிவகை செய்த மத்திய அரசுக்கு திருநங்கைகள் தரப்பிலிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்கள், பெண்கள் போலவே மூன்றாம் பாலினத்தவரையும் சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version