இந்தியா

பிரஷாந்த் கிஷோர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்; ஆடிப்போன மோடி ஜி!

Published

on

இந்தியாவின் ஆன்மாவைக் காப்பற்ற வேண்டுமானால், பாஜக அல்லாத முதல்வர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பிராந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை ஆரம்பம் முதலே, இந்திய அரசியல் உத்தியியாளர் மற்றும் பீகார் ஜனதா தல கட்சியைச் சார்ந்தவருமான பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் பீகா ஜனதாதல் கட்சி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு தங்களது ஆதரவை ஜனதா தல கட்சி அளித்த நிலையில், அதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவராக பிரசாந்த் கிஷோர் உள்ளார்.

எனவே தனது டிவிட்டர் பதிவில், “நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை மிக்க அரசு ஆட்சியில் உள்ளது. எனவே நீதிக்கு அப்பாலிருந்து, இந்தியாவின் ஆன்மாவைக் காப்பற்ற வேண்டுமானால், பாஜக அல்லாத 16 முதல்வர்களும் ஒன்று சேர வேண்டும்.

ஏற்கனவே பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிரான நிலையை எடுத்துள்ளன.

குஜராத்தில் மோடிக்கு ஆதராவாக செயல்பட்டதில் இருந்து, பாஜக எதிராகக் கருத்து தெரிவிக்காமலிருந்து வந்த பிர்ஷாந்த் கிஷோர் முதல் முறையாக இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது அடுத்து வரும் தேர்தல்களில் கண்டிப்பாக மோடி மற்றும் பாஜகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையவும் வாய்ப்புள்ளது.

தற்போது, தமிழகத்தில் திமுகவுக்கான தேர்தல் உத்திகளை பிஷாந்த் கிஷோர் வகுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version