இந்தியா

சிஏ இன்டர்மீடியட் தேர்வு முடிவுகள் எப்போது? ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?

Published

on

சிஏ இன்டர்மீடியட் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ICAI தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சிஏ படித்து முடித்து விட்டால் வேலைக்கு கவலையே இல்லை என்ற முக்கியமான படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. சிஏ என்பது தகுதி தேர்வு, இன்டர்மீடியட் மற்றும் ஃபைனல் ஆகிய மூன்று நிலைகளைக் கொண்டது என்றும் இந்த தேர்வுக்காக பதிவு செய்ததில் இருந்து குறிப்பிட்ட ஆண்டுக்குள் 3 தேர்வையும் முடிக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் ஒரே தேதியில் ஒரே தகுதியில் அனைத்து பாடங்களிலும் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை 6 மாதங்களுக்கு ஒருமுறை நான்கு படங்கள் எழுத வேண்டும் என்பதும் 40 மார்க் எடுத்தால் பாஸ் என்றாலும், நான்கு பாடங்களிலும் சேர்த்து 50% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.

தகுதி மற்றும் இன்டர்மீடியட் ஆகிய இரண்டை முடித்துவிட்டால் பைனான்ஸ் துறையில் நல்ல வேலை கிடைக்கும் என்பதும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் ஆக்கவுண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் டிபார்ட்மெண்டில் பணி செய்யலாம். பிஏ முடித்துவிட்டு தகுதி தேர்வை முடித்தாலே நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதும் இண்டர்மீடியட் முடித்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைக்கு செல்வதால் குறைந்தபட்சம் உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளில் அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவர்களது தனி திறமையை பொருத்து ஒரு சில ஆண்டுகளில் நல்ல பதவிக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மொத்தம் ஐந்து ஆண்டுகளில் சிஏ படித்து முடித்துவிடலாம் என்றும் அட்டன்ட் இல்லாமல் சீக்கிரம் முடித்து விட்டால் மூன்று ஆண்டுகளில் படித்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இன்டர்மீடியட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் ஜனவரி 10 முதல் 15 வரை வெளியாக வாய்ப்பு இருப்பதாக ICAI அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு முடிவுகளை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

ICAI CA இண்டர்மீடியட் தேர்வு முடிவை தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான icaiexam.icai.org, caresults.icai.org மற்றும் icai.nic.in ஆகியவற்றில் சென்று தங்கள் ரோல் எண்கள் மற்றும் பதிவு எண்கள் அல்லது பின் எண்களுடன் உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

 

seithichurul

Trending

Exit mobile version