தமிழ்நாடு

எம்.ஜி.ஆருக்கு சசிகலா ஆலோசனையா..?- கருணாநிதியுடன் தொடர்புபடுத்தி கொதித்த சி.வி.சண்முகம்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன் பேசியுள்ளார்.

புதிய ஆடியோவில் சசிகலா, ‘தலைவரோடையும் நான் சேர்ந்து பயணித்திருக்கேன். நிறைய விஷயங்களை அவருடன் நான் பேசியிருக்கிறேன். என்னிடம் கட்சி சார்ந்து நிறைய கருத்துகளைக் கேட்பார். அதற்கு நானும் மிகப் பணிவுடன் தான் கருத்துகளைச் சொல்வேன்.

அதனால் தான் ஜெயலலிதா கோபப்பட்டால் கூட, அவருடன் அமர்ந்து பேசி, பொறுமையாக முடிவெடுக்க வைப்பேன். தொண்டர்களுக்காக நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்வேன். அப்படிச் சொல்லி தான் ஜெயலலிதாவை தொடர்ந்து இயங்க வைத்தோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது’ என்று பேசியுள்ளார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘1973 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் சசிகலா. அப்படிப்பட்டவர் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கொடுத்தாரா. இதை அதிமுக தொண்டன் எவனாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது’ என்று கொதிப்புடன் பேசியுள்ளார்.

 

Trending

Exit mobile version