தமிழ்நாடு

‘ஊத்தி கொடுக்கிறதுதான அவன் பொழப்பு…’- தினகரனை கண்டபடி பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்

Published

on

அதிமுகவில் சசிகலா – எடப்பாடி பழனிசாமி முகாம்களுக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில் தொடங்கிய இந்த வரவேற்பானது, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சசிகலா வரும் வரை தொடர்ந்தது. அவருக்கு சுமார் 22 மணி நேரம் தொடர் வரவேற்பு கொடுத்தனர் ஆதரவாளர்கள். சசிகலாவின் இந்த மாஸ் கம்-பேக் தமிழக அரசியல் தளத்தில் முக்கியப் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் சசிகலாவை அதிகம் விமர்சிப்பதை விட, அதிமுகவின் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் டிடிவி தினகரை சாடி வருகின்றனர். நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட, ‘தினகரன் தான் எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை பிரித்து அழைத்துச் சென்றவர். அவர் தான் இந்த ஆட்சிக் கவிழ வேண்டும் என்று செயல்பட்டவர். அவர் தான் தற்போது அமமுக என்னும் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அப்படி இருக்கையில் அவரைத் தான் விமர்சிக்க முடியும்’ என்கிற பகீர் கருத்தைத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதானமாக பேசினேனா என என்னைக் கேள்வி எழுப்புகிறார் டிடிவி தினகரன். இவரு தான் எனக்கு வந்து ஊத்திக் கொடுத்தாரு. இவரு தொழிலே அது தானே. தினகரனின் குலத் தொழிலே ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கிறது தான். அவனுங்க குடும்பமே அப்படித் தான் ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கும். கூவத்தூர்ல அப்படித் தான் ஊத்திக் கொடுத்துக் குடிய கெடுத்தானுங்க. இல்லனு சொல்ல சொல்லுங்க பாப்போம் தினகரன?’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு மாநில அமைச்சர், ஒரு அரசியல் கட்சித் தலைவரை தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சித்து உள்ளது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version