தமிழ்நாடு

சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி!

Published

on

ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு பேருந்தை இயக்கலாம். ஆனால் கூட்டம் நிறைந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்று பேருந்து நடத்துநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறப்பு பயணிகள் ரயில் சேவையை மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் இதுவரை மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை தொடங்குவது குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடவில்லை.

சென்னை போன்று சிவப்பு மண்டலங்கள் இல்லாத ஊர்களில் ஆட்டோவில் ஒரு பயணிகளை மட்டும் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சிறிது போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் குறித்த முடிவை இதுவரை எடுக்கவில்லை.

பேருந்து, மெட்ரோ சேவைகளை தொடங்கினாலும், முதலில் குறையாவன வாகனங்களும், தேவை பொருத்து அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நமக்குக் கிடைத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, மே 17-ம் தேதியுடன் ஊரடங்கு முடிந்த பிறகு பொது போக்குவரத்தைத் தொடங்க வாய்ப்புகள் இருந்தாலும் அதில் சரியான தெளிவு இல்லை என்று மட்டும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version