செய்திகள்

குறவர் மக்களை பால் அபிஷேகம் செய்து வரவேற்ற நடத்துனர்… வைரல் வீடியோ…

Published

on

சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார். இந்த சம்பவம் பலரையும் அதிர வைத்தது.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த சம்பவம் நடந்து முடிந்து 2 நாளில், நாகர்கோவிலில் குறவர் இனத்தை 2 வயதானவர்கள் தங்கள் பேரனுடன் பேருந்தில் ஏற அந்த பேருந்து ஓட்டுனர் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டு அவர்களின் பொருட்களை தூக்கி கீழே வீசி எறிந்தார்.

அந்த சிறுவன் கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழவே, போக்குவரத்து கழகம் அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இப்படி தொடர் சம்பவங்கள் நிகழும் நிலையில், பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இருளர் குடும்பத்தினருக்கு இயக்குனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் பால் அபிஷேகம் செய்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த பலரும் இப்படி செய்ய வேண்டும் என அரசு கூறவில்லை. அவர்களுக்கு தேவை சமூக நீதிதான். இதெல்லாம் ஓவர் என பதிவிட்டு வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version