தமிழ்நாடு

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை அடுத்து உயரும் மின், பேருந்து கட்டணம்: அதிர்ச்சி தகவல்

Published

on

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தலையில் இறங்கும் இடியாக மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, ‘மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறியிருப்பதால் பேருந்து கட்டண உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மின் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மின் கட்டணம் சாதாரண பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

வருமானம் உயராத நிலையில் விலைவாசி பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் உயர்ந்து கொண்டே இருந்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணம் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version