இந்தியா

தடையை மீறி பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை!

Published

on

டெல்லியில் அரசின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால், சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காற்று மாசான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நகரம் டெல்லி. தீபாவளிக்கு முதல் ஆளாகப் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட நகரமும் டெல்லிதான்.

வரும் தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பதாகத் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு டெல்லி அரசின் தடையை மீறி பட்டாசு வெடித்தால், 18 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே டெல்லியில் நவம்பர் 10-ம் தேதி வரை பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version